சிறுவர்மணி

விடுகதைகள்

பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். யார் இவன்?

ரொசிட்டா

1. பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். யார் இவன்?

2. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும். இவன் யார்?

3. உங்களுக்குச் சொந்தமான ஒன்று, ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள். என்ன இது?

4. உடம்பெல்லாம் சிவப்பு. குடுமி பச்சை. என்ன இது?

5. ஓயாமல் இரையும்... உருண்டோடி வரும் பந்தும் அல்ல. இது என்ன?

6. எத்தனை தரம் சுற்றினாலும், தலை சுற்றாது... என்ன இது?

7. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி. யார் இவர்கள்?

8. மரத்திலிருந்து தொங்குது ஆனால் மலைப்பாம்பு அல்ல... என்ன இது?

9. பேச்சு கேட்குது, பாடுவது கேட்குது, ஆனால் முகம் தெரியவில்லை. என்ன இது?

விடைகள்:

1. சீப்பு

2. தேள்

3. உங்கள் பெயர்

4. தக்காளி

5. கடல் அலை

6. மின்விசிறி

7. பூட்டும் சாவியும்

8. ஆலமர விழுது

9. வானொலிப் பெட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT