விடுகதைகள்
வீட்டிலிருப்பான் காவலாளி... வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி... இவர்கள் யார்?
1. வீட்டிலிருப்பான் காவலாளி... வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி... இவர்கள் யார்?
2. எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது... இது என்ன?
3. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு... இது என்ன?
Advertisement
4. உருவத்தில் சிறியவன்... உழைப்பிலோ பெரியவன்... இவன் யார்?
5. காலில் தண்ணீர் குடிப்பான்... தலையில் முட்டையிடுவான்... இவன் யார்?
6. எட்டாத ராணி இரவில் வருவாள்... பகலில் மறைவாள்... இவள் யார்?
7. நடந்துகொண்டேயிருந்தவன் நின்றான்... தலையைச் சீவினேன். மறுபடியும் நடக்க ஆரம்பித்தான்... இவன் யார்?
8. வால் நீண்ட குருவிக்குத் தலை உண்டு... வயிறில்லை... இவன் யார்?
9. அம்மா போடும் வட்டம்... பளபளக்கும் வட்டம்... சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன ஆசை... இது என்ன?
விடைகள்:
1. பூட்டு, சாவி
2. மின்விசிறி
3. பாய்
4. எறும்பு
5.தென்னை மரம்
6. நிலா
7. பென்சில்
8. அகப்பை
9. அப்பளம்