சிறுவர்மணி

விடுகதைகள்

நான்கு எழுத்து ராகம், கடைசி இரண்டு எழுத்து புத்தருக்கு ஞானம் தந்த இடம்?

ரொசிட்டா

1.    நான்கு எழுத்து ராகம், கடைசி இரண்டு எழுத்து புத்தருக்கு ஞானம் தந்த இடம்?

2.    காய்ந்த மரத்தில் கல்லெடுத்துப் போட்டேன், காவல்காரர்கள் நூறுபேர் வந்தனர்...

3.    ஆடும்போது இரையும், ஆடி முடித்தால் பதுங்கும்... இது என்ன?

4.    உயிர் இல்லை ஊரைச் சுமப்பான், பேச்சில்லை பெருமூச்சு விடுவான். இவன் யார்?

5.    பளபள பட்டுடுத்தி, பதினாயிரம் குஞ்சரம் தொங்க, தெருவில் அசைந்தாடி வருவாள், திரும்பிப் பார்க்க மாட்டாள். இவள் யார்?

6.     உயரே பறந்திடும் பறவையுமல்ல; அழகான வாலுண்டு குரங்கு அல்ல; முகிலில் மறைந்திடும் நிலவு அல்ல... இது என்ன?

7.    தந்தைக்கோ அடி, தனயனுக்கோ படி... இது என்ன?

8.    மாடி மேல் மாடி கட்டிக் குடியிருக்கும்.... தொட்டால் குத்தும். இது என்ன?

9.    மரம் நிறையக் காய் உண்டு, ஆனால் ஒரு காய்கூடப் பழுக்காது. இது என்ன?

விடைகள்:

1. காம்போதி

2. தேன்கூடு

3. பாம்பு

4. ரயில் வண்டி

5. தேர்

6. விமானம்

7.  நெற்கதிர், நெல்

8. சப்பாத்திக்கள்ளி

9. முருங்கைக்காய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT