முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

பூப் போன்ற மகராசி, காயத்துக்குத் துணையாவாள். யார் இவள்?

Updated On : 24 அக்டோபர், 2015 at 3:21 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:32 PM

1.  பூப் போன்ற மகராசி, காயத்துக்குத் துணையாவாள். யார் இவள்?

2.  நெட்டை அக்கா தாக்குகிறாள், குட்டை அக்கா தாங்குகிறாள். யார் இவர்கள்

3.  நினைக்கும்போதே வாய் இனிக்கும், நீரில் விட்டால் தங்கிவிடும். இது என்ன?

Advertisement

4.  பாதாளத்தில் பிறந்தவன், பம்பரத்தில் சுழன்றவன், எல்லா வீட்டிலும் இருப்பான்.. இவன் யார்?

5.  பச்சைச் செடியில் தயிர்சாதம் பூத்துக் குலுங்குது... இது என்ன?

6.  மஞ்சள் பட்டுடுத்தி, மடிக்குள் பிள்ளையை வைத்து கடையில் வீற்றிருப்பாள். இவள் யார்?

7.  இரு குதிரைகள் மீது ஒரு ராசா.. இது என்ன?

8.  முச்சந்தியில் மூன்று விளக்கு. பார்த்து நடந்தால் பாதுகாப்பு. இது என்ன?

9.  பெட்டியில் உறங்குவேன், சீண்டினால் கொதிப்பேன். நான் யார்?

விடைகள்:

1. பஞ்சு

2. உலக்கை, உரல்

3. தேன்

4. மண் பானை

5. மல்லிகைப்பூ

6. மாம்பழம்

7. செருப்பு

8. சிக்னல் விளக்கு

9. தீக்குச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.