சிறுவர்மணி

விடுகதைகள்

1.   அன்னதான சத்திரத்தில், வால் நீண்ட குருவி தான் உண்ணாது, மற்றவருக்கு அள்ளிக் கொடுக்கும். இது என்ன?

ரொசிட்டா

1.   அன்னதான சத்திரத்தில், வால் நீண்ட குருவி தான் உண்ணாது, மற்றவருக்கு அள்ளிக் கொடுக்கும். இது என்ன?

2.   ஏறுவான் இறங்குவான்... தாகம் தணிப்பான்... இவன் யார்?

3.   ஓடையில் ஓடாதது, அருவியில் பாயாதது, ஒருவரும் அருந்தாது, எது?

4.   நெருப்புக்கு அஞ்சாதவன், தான் வேகாமல், தனக்குள் இருப்பதை வேக வைப்பான். இவன் யார்?

5.   பொட்டுப் போல இலை இருக்கும். பொரி போல பூ பூக்கும். தின்னக் காய் காய்க்கும், தின்னாத பழம் பழுக்கும். இது என்ன?

6.   இவரும் ஊசி போடுவார்... ஆனால் குணமாக்க மாட்டார்... நோய் தருவார். இவர் யார்?

7.   தண்ணீரிலே நீந்தி வரும்... தரையிலே தாவி வரும்...

இது என்ன?

8.   செல்லும் வழியெல்லாம்  தம்பி, ரோடு போடுவான்....  இவன் யார்?

9.   வெள்ளை உடை உடுத்திய யோகியார்,  ஏரிக்கரையோரம் கடும் தவம்

செய்கிறார்... யார் இவர்?

விடைகள்

1. அகப்பை

2. ஏற்றம்

3. கண்ணீர்

4. பானை

5. முருங்கை

6. கொசு

7. தவளை

8. நத்தை

9. கொக்கு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT