சாயச்சுவர்!
உ.வே.சா அவர்கள் மாணவப் பருவத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் பாடம் கற்கச் சென்றார்.
உ.வே.சா அவர்கள் மாணவப் பருவத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் பாடம் கற்கச் சென்றார். ஆசிரியரும் திண்ணையில் அமர்ந்தார். அன்று வீட்டுச் சுவர்களில் வண்ணம் (சாயம்) பூசப்பட்டிருந்தது. ஆனால் காயவில்லை. இதை உணர்ந்தார் உ.வே.சா. ஆசிரியர் கவனமின்றி சுவரில் சாய முற்பட்டார். உ.வே.சா அவரைத் தடுக்க நினைத்தார். அவர் ஆசிரியரிடம், ""ஐயா, அது சாயச் சுவரில்லை..., சாயச் சுவர்!'' என்றார்.
மாணவரின் பேச்சின் பொருளை உணர்ந்த ஆசிரியர், பின்னால் திரும்பிப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார். உ.வே.சா வையும் மகிழ்ந்து பாராட்டினார்.