* ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும்.
* மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தேடிய போதிலும் விதிப்படியே அல்லாமல் சுகத்தை அதிகமாய் அனுபவிக்க இயலாது.
* காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர்.
* ஒருவன் பிறர் மேல் பழிச்சொற்களைச் சொன்னால் அவன் எல்லோருக்கும் பகைவனாவான்.
* கோள் கூறப்படுவதைக் கேட்பவன் இல்லையாயின் கோள் சொல்பவனும் இல்லை.
* மென்மையான சொற்களை வன்மையான சொற்களால் வெல்ல முடியாது. ஆனால் வன்மையான சொற்களை மென்மையான சொற்கள் வென்றுவிடும்.
* சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம்.
* எந்தச் செயலும் அதற்குரிய காலத்திலேயே செய்யப்பட வேண்டும்.
* வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உறவினராவர்.
* நல்லவரோடு நட்புக்கொண்டு பின்பு அவரை விட்டுப் பிரியாதீர்கள்.
* ஈகைக் குணம் இல்லாதவர்கள் தம்மை வருத்திப் பறிப்பவர்களுக்குத் தம் பொருளைக் கொடுப்பாரேயல்லாமல் பெற்றோர் உறவினர் முதலியோர்க்குக் கொடுத்து உதவ மாட்டார்கள்.
* அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு நேரும்.
* உங்கள் நண்பர்களிடமும் உங்கள் ஏழ்மை நிலையைப் பற்றிப் பேசாதீர்கள்.
ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.