முகப்பு
சிறுவர்மணி

கதைப்பாடல்: "வானவில்'

வண்ணம் ஏழு கொண்டதாம்"வானவில்'தான் என்பதாம்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

வண்ணம் ஏழு கொண்டதாம்

"வானவில்'தான் என்பதாம்

எண்ணிப் பார்த்தால் தெரிந்திடும்

இயற்கை காட்டும் அதிசயம்!

கிழக்கு அல்லது மேற்கிலே

கீழ்வானில் அரை வட்டமாய்

மழைக்குப் பின்னர் தோன்றிடும்

மாலை, காலை வேளையில்!

சூரியன் இருக்கும் திசைக்குமே

எதிர்ப்புறத்தில் எழிலுடன்

யாரும் பார்த்து வியக்கலாம்

சிறிது நேரத்தில் மறைந்திடும்!

வீசும் கதிரவன் ஒளியினை

"விப்ஜியார்' என்று அறிவியல்

பேசும் இந்த உண்மையை

"நிறப்பிரிகை' என்றும் கூறுவர்!

நாட்டின் உயர்வைக் காட்டிடும்

நல்ல இயக்கம் எனப்படும்

கூட்டுறவுச் சங்கக் கொடிதனில்

கொண்ட வண்ணம் ஏழுமாம்!

அழகின் சிரிப்பில் இதுவும் ஓர்

அற்புதம் என்றே கவிஞர்கள்

பழகு தமிழில் பாடினர்

பார்ப்போம்! படிப்போம்! மகிழுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.