சிறுவர்மணி

ஆடுகளம்

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக   ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.   அந்தப் படத்தைப்

ரொசிட்டா

இதிலுள்ள  6 துண்டுப் படங்களையும் சரியாகக் கத்திரித்து, ஒழுங்காக   ஒட்டினால் ஓர் அழகிய படம் வரும்.   அந்தப் படத்தைப்  பார்த்து  நீங்கள் வரைந்தும் பார்க்கலாம்   அதற்கு  வண்ணம் தீட்டியும் மகிழலாம்!

ஆறு துண்டுகளை ஒழுங்காக ஒட்டினால் கிடைக்கும் படம்

சொல் ஜாலம்...

இங்கே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் வரும் எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அர்த்தமுள்ள புதிய சொல் (மகாவிஷ்ணு தொடர்புடைய) ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டு பிடித்து விடுவீர்கள். முயற்சியுங்கள்...

1. யானைப்பாகன் கையில் இருக்கும்...

2. இது நன்றாக இருந்தால்தான்  உள்ளே நுழையலாம்..

3. அவனுக்கு இதெல்லாம் ............ ஊதி விடுவான்...

4. சிறிய தேரை இப்படி அழைப்பார்கள்...!

5. எங்கெங்கு காணினும் மணல் வெளி.....

விடை: கட்டங்களில் வரும் சொற்கள்

1. அங்குசம், 

2. வரவேற்பு, 

3. சாதாரணம், 

4. சப்பரம், 

5. பாலைவனம்

வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும்  சொல்: அவதாரம்

தவளைக்குத் தனது இருப்பிடமான பூக்கள் இருக்குமிடத்தை அடைய வழி காட்டுங்கள்...

1 முதல் 42 வரை உள்ள  புள்ளிகளை இணைத்தால் பந்து விளையாடும் சிறுவன் வருவான்.

விடுகதைகள்

1.   இறைவன் படைத்த பச்சை வண்ணப் பெட்டிக்குள் முத்துக்களையும் போட்டு வைத்தான்.  இது என்ன?

2.   உள்ளே ஒன்றும் இல்லாதவனுக்கு ஓராயிரம் சட்டைகள். யார் இவன்?

3.   உள்ளே இருக்கும்வரைதான் எனக்கு உயிர், வெளியில் வந்துவிட்டால் நான் இல்லை?

4.   இன்று நான் இல்லை, ஆனாலும் என்னை எதிர்பார்த்துக் காத்திருப்போர் ஆயிரம் கோடி?

5.   மழையோடு வரும், மாலையில் காணாமல் போய்விடும். இது என்ன?

6.   இரவிலே வரும் உயிருள்ள சீரியல் பல்பு...?

7.   என்னோடு எப்போதும் இருப்பவன், எட்டித்தான் பார்க்க முடியவில்லை.?

8.   பிடுங்கலாம் நட முடியாது. யார் இவன்?

9.   இருந்த இடத்திலேயே இரவும் பகலும் ஓடிக்கொண்டிருப்பான். யார் இவன்?

விடைகள்:

1. வெண்டைக்காய், 

2. வெங்காயம், 

3. ரகசியம், 

4. நாளை, 

5. ஈசல் பூச்சி, 

6. மின்மினிப் பூச்சி,

7. முதுகு,

8. பல்,

9. கடிகார முள்

கண்டுபிடி  கண்ணே!

இரண்டு படங்களுக்கும் உள்ள 6 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்!   

விடை: 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT