* ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும்
இடைவெளி அதிகம் இருந்தால் அவன்
வாழத்தெரியாதவன். இரண்டும் ஒன்றியிருந்தால் அவன் வாழ்கிற மனிதன்.
-கதே
* உனக்காகப் பொய் சொல்லுபவன் உனக்கு
எதிராகவும் சொல்வான்.
-இங்கர்சால்
* உலக சரித்திரத்தில் காணப்படும் சாதனைகள் அனைத்தும் உற்சாகத்தின் வெற்றிச்
சின்னங்களே!
-எமர்ஸன்
* உண்மை என்பது புனிதமான சாதனை
-டாக்டர் ராதாகிருஷ்ணன்
* இலக்கியம் என்பது வாழ்க்கையைப் பார்த்து எழுதப்படும் அதன் நகல் அல்ல.
வாழ்க்கையையே தன் போக்கிற்கேற்ப மாற்றி அமைத்து மறுகோலம் செய்யும் அச்சு
-ஆஸ்கார் ஒயில்ட்
* அவரவர் வீழ்ச்சிக்கு அவர்களேதான்
காரணமாக இருக்க முடியும்.
-நெப்போலியன்
* வெற்றி என்பது குறிக்கோள் அன்று. அது ஒரு பயணமே. பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
-ஆர்ஷேவிட்
* விடாமுயற்சி உடையவன் விரும்பிய
அனைத்தையும் பெற்று விடுகிறான்.
-ரூஸ்வெல்ட்
* வார்த்தையில் மட்டும் பணிவு இருந்தால் போதாது. நடத்தையிலும் இருக்க வேண்டும்.
-மில்டன்
* மின்மினிப்பூச்சி பறக்கும்போதுதான்
பளபளக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கும்போதுதான் மனிதன் பிரகாசிக்கிறான்.
-பெய்லி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.