முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும். ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்!

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:31 PM
பகிர்:

*   பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும். ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்!

*   உன்னை நீயே கிண்டல் செய்து கொள்ள முடிகிறதா? அப்படியென்றால் நீ சந்தோஷமாய் வாழ்கிறாய் என்று அர்த்தம்!

*   வாழ்க்கைப் பாதை முட்கள் நிறைந்தது. நீ செருப்புப் போட்டுக்கொண்டு நடந்தால் புத்திசாலியாகிறாய். செருப்புப் போடாமல் நடந்தால் அனுபவசாலியாகிறாய்!

*   பிறரது சோகத்தைக் கண்டு சிரித்தால் நீ ஒரு முட்டாள். உனது சோகத்தைக் கண்டு நீயே சிரித்தால் நீ மேதை!

*   சிறிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிய வழி..., பெரிய தொல்லைகளை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வதுதான்!

*   காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது....., ஆனால் என்ன விந்தை பாருங்கள்! காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறது!

*   உதவி கேட்டு அழுபவன், உதவி செய்பவனை எப்பாடு பட்டாவது சிரிக்க வைக்க வேண்டும்!

*   உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டுமா? யாரிடமாவது உதவி கேட்டுப்பார்!

*   யாரைப்பற்றியும் உனக்குக் கவலை இல்லையென்றால் உன்னைப் பற்றியும் உனக்குக் கவலை இல்லை என்று அர்த்தம்!

*   தனியாக அழலாம்...!  ஆனால் தனியாகச் சிரிக்க முடியாது...,தவறாக நினைப்பர்! சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்!

(பரிகாசமூட்டும் பழமொழிகளும்  பொன் மொழிகளும்--நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.