முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: புதிய தீர்ப்பு

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி. வாழ்ந்து வந்தார். அவரிடம் சில ஆடுகளும் இருந்தன. பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் வேட்டைக்குப்

சிறுவர்மணி

முத்துக் கதை: புதிய தீர்ப்பு

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி. வாழ்ந்து வந்தார். அவரிடம் சில ஆடுகளும் இருந்தன. பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் வேட்டைக்குப்

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி. வாழ்ந்து வந்தார். அவரிடம் சில ஆடுகளும் இருந்தன. பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான். அவன் வேட்டைக்குப் பயன்படுத்திய சில வேட்டைநாய்களும் வைத்திருந்தான்.

இந்த நாய்கள் அடிக்கடி அருகில் உள்ள விவசாயி வீட்டு ஆட்டுக்குட்டிகளைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாக இருந்தன. இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை வீட்டுக்காரனான வேட்டைக்காரனைச் சந்தித்து, "உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக் கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளைக் கடித்து காயப்படுத்துகின்றன' என்றான்.

ஆனால் அந்த வேட்டைக்காரன் அதை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. அதேபோல் நாய்கள் வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன் "இதோ பார் ஆட்டை துரத்துவது கடிப்பது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ' என்றான்.

மனமுடைந்த விவசாயி, அந்த ஊர் பஞ்சாயத்துத் தலைவரைச் சந்தித்து, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக் கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு. ஏனென்றால் விவசாயி நல்லவன். எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருபவன். விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டார் பஞ்சாயத்துத் தலைவர். 

""என்னால் பஞ்சாயத்தைக் கூட்டி அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால் நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியைச் சம்பாதிக்க நேரிடும். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் உனக்கு நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?' என்று விவசாயியைப் பார்த்துக் கேட்டார்.

அவர் சொன்னதைப் புரிந்துகொண்ட விவசாயி "அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில்தான் தனக்கு விருப்பம்' என்றான்.

""சரி, உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருக்கவும், அந்த வேட்டைக்காரனும் உன் நண்பனாக இருக்கவும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்'' என்று சொல்லி பஞ்சாயத்துத் தலைவர் சில விஷயங்களை விவசாயியிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி, பஞ்சாயத்துத் தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான். தனது பட்டியில் இருக்கும் தனது ஆட்டுக்குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் பரிசளித்தான். ஆட்டுக்குட்டிகளைப் பெற்றுக்கொண்ட அந்தக் குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்தக் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள். தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுகாக்க தற்போது வேட்டைக்காரன் நாய்களை சங்கிலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது.

யாரும் சொல்லாமலே நாய்களை சங்கிலியால் பிணைத்தான். தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,  சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் வேட்டைக்காரன். ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகி விட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →