சிறுவர்மணி

விடுகதைகள்

ஒரு கோப்பை பசும்பால், ஊரெல்லாம் பெருகிடுமாம்! இது என்ன?

தினமணி

1.   மெதுவாய்த் துடுப்பு நான்கு தள்ளி வர, விதானத்துக்குள் சீமாட்டி அமர்ந்து வர... என்ன இது?

2.    நாணல் புதருக்கு நடுவே ஓடுது, சிறு படகு...

3.   ஒரு கோப்பை பசும்பால், ஊரெல்லாம் பெருகிடுமாம்! இது என்ன?

4.   சின்னஞ்சிறு அறையில் சீராக வாழ்ந்திடுவார்; கருத்த உடை அணிவார், கவலையில்லாத துறவி அவர். தேனைக் குடித்திடுவார்,ஆனந்தமாகப் பாடிடுவார். இவர் யார்?

5.   வெள்ளிக் கிண்ணத்தில் தங்கக் காசு - அது என்ன?

6.    கை உண்டு, பிடிக்க முடியாது. கால் உண்டு, நடக்க முடியாது - அது என்ன?

7.   உலகமெங்கும் படுக்கை விரித்தும், உறங்காமல் அலைகிறான் - அவன் யார்?

8.   தலையில் ஏறும் மாடு, சுருண்டு படுத்திருக்கும் மாடு. - அது  என்ன மாடு?

9.   அடித்தாலும், உதைத்தாலும் அழ மாட்டான் - அவன் யார்?

விடைகள்:

1. ஆமை,  2. நெசவு நாடா,  3. முழு நிலா,  4. தேனீ,  5. முட்டை,  6. நாற்காலி,  7. கடல் அலை, 8. சும்மாடு,  9. பந்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT