"மெட்ரோ இரயில்'
எத்தனை இரயிலில் பயணித்தும்ஏராள ஊர்களைக் கண்ணுற்றும்புத்தம் புதிய "மெட்ரோ'வில்பயணம் செய்ய எனக்காசை!
எத்தனை இரயிலில் பயணித்தும்
ஏராள ஊர்களைக் கண்ணுற்றும்
புத்தம் புதிய "மெட்ரோ'வில்
பயணம் செய்ய எனக்காசை!
ஆலந்தூரில் புறப்படுமாம்
கோயம்பேட்டை அடைந்திடுமாம்!
காலம் இருபது நிமிடந்தான்
கடக்கும் தொலைவோ அதிகம்தான்!
எடுத்தேன் பயணச் சீட்டொன்றை
ஏறி அமர்ந்தேன் மகிழ்வாக!
அடுத்த வினாடி புறப்பட்டு
அம்புபோல் சென்றது விரைவாக!
நின்றபின் கதவுகள் திறப்பதனால்
மூடிய பின்னரே கிளம்புவதால்
என்றும் விபத்து நேராது
எல்லாம் தானே இயங்குவதால்!
குறைகள் உடனே களைந்திடவும்
குளுகுளு வசதிபோல் பலவுண்டு
நிறைய விதிகள், எச்சரிக்கை
நிம்மதியாகப் பயணிக்க
மக்கள் விரைவாய் இயங்கிடவும்
மாநகர் முழுதும் சுற்றிடவும்
தக்க ஏற்பாடு தந்திட்ட
"தமிழக அரசு'க்குப் பாராட்டு!