1.மடிக்க முடியாத காகிதம், எண்ண முடியாத பணம், உண்ண முடியாத ஆரஞ்சுப்பழம், கண்ணைக்கூச வைக்கும் வைரம்.
2.விரல்கள் ஐந்துதான், ஆனாலும் உயிரில்லை.
3.மெல்லிய உருண்டை வடிவ முட்டை, யாராலும் தூக்க முடியாத முட்டை, எடையேயில்லாத முட்டை.
4.உனக்குத்தான் இது சொந்தம், ஆனால் பிறர்தான் இதை அதிகம் பயன்படுத்துவர்.
5.ஒற்றைக்கண் கொண்ட குச்சி உருவம், உடம்பில் பட்டால் வலி ஏற்படுத்தும்.
6.ஆரஞ்சு வண்ணக்காரன், காகிதம், குப்பை கொடுத்தால் உண்பான், நீர் கொடுத்தால்
உயிர் விடுவான்.
7.உனக்கு முன்னே இருப்பான், உன்னைத் திருப்பிக் காட்டுவான்.
8.நல்ல வேலைக்காரன், வேலை முடிந்தவுடன் மூலையில் போய் நிற்பான்.
9.காலமெல்லாம் திறந்து மூடும் பெட்டி, களைப்பே கொள்ளாத பெட்டி.
விடைகள்:
1. வானம், நட்சத்திரம், நிலா, சூரியன்
2. கை உறை
3. நீர்க்குமிழி
4. பெயர்
5. தையல் ஊசி
6. நெருப்பு
7. கண்ணாடி
8. துடைப்பம்
9. கண், இமைகள்
-ரொசிட்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.