சிறுவர்மணி

கிராமத்துப் பொக்கிஷங்கள்!

DIN

"குடுகு டெ'ன்று விரைந்து அணில்
தோப்புக் குள்ளே ஓடும்
"கிடுகி டெ'ன்று மரத்தில் ஏறும்
கிளையில் ஊஞ்சம் ஆடும்!

பழுத்த பழத்தைப் பாதி தின்னும்
மீதி கீழே போடும்
விழுந்த பழங்கள் மரத்தின் அடியில்
புழுதி படிந்து கிடக்கும்!

சிறுவர் நாங்கள் கூடிச் செல்வோம்
சிந்தை மகிழ்ந்து அவற்றைப்
பொறுக்கி வாய்க்கால் நீரில் கழுவி
ஆசை யாரப் புசிப்போம்!

அணிலின் உறவும், கடித்த பழமும்
எமக்கு இனிக்க உதவும்
புனிதத் தோப்பும் நல்வாய்க் காலும்
கிராமப் பொக்கிஷங்கள்!
-அழகு. இராமானுஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT