முகப்பு
சிறுவர்மணி

தரகுப்பணம்!

தரகுப்பணம்!

சிறுவர்மணி

தரகுப்பணம்!

தரகுப்பணம்!

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:25 PM
பகிர்:

பரோடா சமஸ்தான நீதிபதியாக இருந்தார் ஷிண்டே. அவரை மஹாராஜாவுக்கு மிகவும் பிடிக்கும். ஷிண்டேயை அழைத்துக்கொண்டு பாரீஸூக்குச் சென்றார். அங்கு ஒரு நகைக்கடைக்கு இருவரும் சென்றனர். மஹாராஜா ஒரு விலையுயர்ந்த நகையை வாங்கினார். 
மறுநாள் நகைக்கடையிலிருந்து ஒருவர் ஷிண்டேயை சந்திக்க வந்தார். அவர் நீதிபதி ஷிண்டேயிடம், ""நீங்கள் மஹாராஜாவுடன் கடைக்கு வந்ததற்கு நன்றி. உங்களுக்கு கமிஷன் தர வந்திருக்கிறேன். உங்களுக்கு கமிஷன் எப்படி வேண்டும் ரொக்கமாகவா? நகைகளாகவா?'' என்று கேட்டார். 
ஷிண்டேவுக்கு ஒன்றும் புரியவில்லை. ""எனக்கு எதற்கு கமிஷன்? ‘' என்று கேட்டார். 
""பரோடா மஹாராஜாவை எங்கள் கடைக்கு அழைத்துவந்து ஒரு பெருந்தொகைக்கான வியாபாரம் செய்தீர்களே! அதற்குத்தான்!''
இதைக் கேட்ட ஷிண்டே, ""நான் மஹாராஜாவை அழைத்து வரவில்லை....அவர்தான் என்னை அழைத்துவந்தார்.''என்றார். 
""வாடிக்கையாளர்களோடு வருகிறவர்களுக்கு கமிஷன் கொடுப்பது எங்கள் வழக்கம்!''
"" அப்படியானால் கமிஷனைக் குறைத்துக்கொண்டு மஹாராஜாவுக்கு அந்தத் தொகையைக் கழித்து நகையைக் கொடுத்திருக்கலாமே....மஹாராஜாவுக்கு லாபமாக இருந்திருக்குமே!''
""அது எங்கள் வழக்கமில்லை!''
"" கமிஷன் வாங்குவது என் வழக்கமில்லை!''
""தாங்கள் கமிஷன் வேண்டாமென்று சொல்வதால் மஹாராஜாவுக்கு ஒரு லாபமும் இல்லை! ஏன் இத்தனை பெரிய தொகையை வேண்டாமென்று உதறித் தள்ளுகிறீர்கள்?''
""மஹாராஜாவிடமிருந்து நான் என் உழைப்புக்கு சம்பளம் வாங்குகிறேன்! இந்தக் கமிஷன் எனக்கு வேண்டாம்!''
""கமிஷன் வேண்டாமென்று சொல்பவரை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை! ஆச்சரியமாக இருக்கிறது! உங்கள் நேர்மையான நடத்தையைப் பற்றி ராஜாவுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்! இந்த விஷயம் தெரிந்தால் ராஜாவுக்கு உங்கள் மீது மதிப்பு மேலும் கூடும்!'' 
""தயவுசெய்து அப்படிச் செய்துவிடாதீர்கள்!....மஹாராஜா அடிக்கடி பாரீஸ் வந்திருக்கிறார். உங்கள் கடைககும் வந்திருக்கிறார். அப்படிச் செய்தால் இதற்கு முன்னர் அவரோடுகடைக்கு வந்த அதிகாரிகள் மீது அவருக்கு சந்தெகம் வரும். வீணாக அவர்களுக்கும் அவதிப்படுவார்கள்! ஏன் பொல்லாப்பு? 
தயவுசெய்து இதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்!'' என்றார் ஷிண்டே!
நீதிபதி என்றும் நீதிபதியே!
நல்லி குப்புசாமி செட்டியாரின்
"வழிகாட்டும் கதைகள்' நூலிலிருந்து

முழு கட்டுரையைப் படிக்க →