சிறுவர்மணி

பயன்பாடு!

ஜோ ஜெயக்குமார்

ஒரு முறை எம்.ஜி.ஆரும், கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணனும் நடந்து போய்க்கொண்டிருந்தனர். வழியில் சிறு நீரோடை. அதைத் தாண்டிய எம்.ஜி.ஆரின் செருப்பு அறுந்துவிட்டது. அதைத் தூக்கி எறிந்து விட்டார் எம்.ஜி.ஆர். ""நாளை புதுச் செருப்பு வாங்க வேண்டும்'' என்று கூறினார். மறுநாள் கலைவாணர் எம்.ஜி.ஆரிடம், ""இந்தச் செருப்பு உங்கள் காலுக்கு சரியாக இருக்கிறதா பாருங்கள்'' என்று ஒரு ஜோடி செருப்பைக் காட்டினார். அசந்து போய்விட்டார் எம்.ஜி.ஆர்! முதல் நாள் அவர் தூக்கி எறிந்த செருப்பதான் அது! அதை மெருகேற்றி புத்தம்புதிதாக மாற்றியிருந்தார் கலைவாணர். அத்துடன் எம்.ஜி.ஆரிடம், "" முடிந்த வரைக்கும் எதையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்'' என்றும் கூறினார் கலைவாணர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT