சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1.  தாகம் போக்கும் தண்ணீர் இல்லை... களைப்பைப் போக்கும் மருந்தும் இல்லை... சண்டைக்குச் செல்லும் இது ஆயுதமும் இல்லை... இது என்ன?
2. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான்... இவன் யார்?
3. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை... இவன் யார்?
4. அடிக்காத பிள்ளை, அலறித் துடிக்கும்... இது என்ன?
5. அக்கா விதைத்த முத்து... அள்ள முடியாத முத்து... இது என்ன?
6. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்... இது என்ன?
7.  நீந்தத் தெரியும் மீன் இல்லை... நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை... இறக்கை இருந்தும் பறக்காத பறவை... இது என்ன?
8.  விடிய விடிய பூந்தோட்டம், விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... இது என்ன?
9. தண்ணீரில் நீந்தி வரும், தரையிலோ தாண்டி வரும்...இது என்ன?
விடைகள்:
1. சோடா
2. கடல் அலை
3. தீக்குச்சி
4. தொலைபேசி
5. கோலம்
6. கானல் நீர், கண்ணீர்
7. வாத்து
8. நட்சத்திரங்கள்
9.  தவளை
-ரொசிட்டா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT