* "அப்பா, பீப்பீ வாங்கித்தாப்பா!''
"வேணாண்டா...,நீ எல்லாரையும் ஊதித் தொந்தரவு பண்ணுவே''
"இல்லேப்பா...,பண்ண மாட்டேன்....,எல்லாரும் தூங்கினப்புறம் ஊதறேன்ப்பா''
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன் கோட்டை.
* "அரிசியை ஏன் கையால குத்தறே?''
"கைக்குத்தல் அரிசி நல்லதுன்னு சொன்னாங்கடா''
மு.சுகுமாரன்,
14/40, பூக்காரத் தெரு, மானாமதுரை-630606.
* "மாயவரத்திலேர்ந்து கும்பகோணம் எவ்வளவு தூரம்?''
"கும்பகோணத்திலேர்ந்து மாயவரம் இருக்கறதூரம்தான்''
எஸ்.கே.சரவணன்,
மயிலாடுதுறை.
* "அப்பா எனக்கு பாட புத்தகம் வாங்கித்தாப்பா!''
"பாட எதுக்கு புத்தகம்? வாய் மட்டும் போதுமே''
மு.நாகூர்,
கீழக்கரை-623517.
* "நான் தினசரி வாக்கிங் போறேன்...''
"நடந்தேவா சார்!!??''
முத்தூஸ் தொண்டி.
* "பொண்ணைப் பாட்டுக் கிளாஸிலே சேர்த்துட்டு நீ ஏன் வீட்டுலே பாடறே?
"இது அவளோட ஹோம் ஒர்க்!''
பர்வதவர்த்தினி,
5, வீரராகவன் தெரு,
அண்ணாநகர்,
பம்மல்,
சென்னை-600075.
வாரம் 2 டி-சர்ட் பரிசு
நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும் தலா
ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.