1. பூப்போல மகராசி, காயத்துக்கும் துணையானாள்... யார் இவள்?
2. நல்லதை அனுப்பிவிட்டு கெட்டதை ஒதுக்கிக் கொள்வான்... யார் இவன்?
3. கையைப் பிடித்தார் காசு கேட்டார்... யார் இவர்?
4. மணமில்லாத மலர்கள், மாலை கட்டாத மலர்கள்... இது என்ன?
5. தீயினால் சுட்டாலும் சாகாதவன், தடுக்கி விட்டால் இறந்து விடுவான்... யார் இவன்?
6. போட்டால் ஒரு மடங்கு, போட்டு எடுத்தால் பல மடங்கு... இது என்ன?
7. கிணற்றைச் சுற்றி புல்... இது என்ன?
8. குற்றம் செய்யாமலே குடுமி பிடிக்கிறான்... இது என்ன?
9. வேலி போடாத வயல், விதைத்தாலும் விளையாத வயல்... அது என்ன?
விடைகள்:
1. பஞ்சு
2. சல்லடை
3. ஜோசியர்
4. நட்சத்திரங்கள்
5. மண்பானை
6. அப்பளம்
7. கண்ணைச் சுற்றி இருக்கும் ரோமம்
8. சவரத் தொழிலாளி
9. வானம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.