குட்டிக்குரங்கு!
குட்டிக் குரங்கு கிளையை விட்டு கிளைக்குத் தாவுதுதட்டி விட்ட தழையினாலே தரையில் விழுந்தது!
குட்டிக் குரங்கு கிளையை விட்டு கிளைக்குத் தாவுது
தட்டி விட்ட தழையினாலே தரையில் விழுந்தது!
சட்டித் தலையில் பட்ட அடியால் மயக்கம் வந்தது
குட்டிப் பூனை தூக்கி விட்டு தண்ணீர் கொடுத்தது!
மாம்பலத்து மயிலு கேட்டு ஓடி வந்தது!
மாம்பழத்தை மாட்டு வண்டியில் ஏற்றி வந்தது!
கொய்யாத் தோப்பு கிளியக்காவும் பறந்து வந்தது!
கொய்யாப்பழத்தைக் கூடை நிறைய கொண்டு வந்தது!
நாவல் பட்டி அணிலு அண்ணா நடந்து வந்தது!
நாவல் பழத்தை பையில் போட்டு தூக்கி வந்தது!
சிட்டுக் குருவி "கீச்சு...கீச்சு' பாட்டுப் பாடுது!
குட்டிக் குரங்கு கேட்டுக் கிட்டே தூங்கிப் போனது!