முகப்பு
சிறுவர்மணி

லஞ்சத்தின் பலன்!

திருடன் ஒருவன் திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு வந்தான். அங்கே காவலுக்கு என்று ஒரு நாய் இருந்தது! அந்த நாய் திருடனைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது! திருடன் கையில் ஒரு ரொட்டியை எடுத்து நாய் முன் வீசினான்!

Updated On : 8 செப்டம்பர், 2017 at 10:17 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:20 PM

திருடன் ஒருவன் திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு வந்தான். அங்கே காவலுக்கு என்று ஒரு நாய் இருந்தது! அந்த நாய் திருடனைப் பார்த்து குரைக்கத் தொடங்கியது! திருடன் கையில் ஒரு ரொட்டியை எடுத்து நாய் முன் வீசினான்! ஆனால் நாய் அந்த ரொட்டியைத் தின்ன மறுத்து விட்டது! அது மட்டுமல்ல திருடனின் காலையும் கடித்து விட்டது!
கடி பட்ட திருடன், ""நான்தான் உனக்கு ரொட்டி கொடுத்தேனே....,நீ என்னை இப்படிக் கடிக்கலாமா?'' என்றான்.
""ஏன் கடித்தேன் தெரியுமா? உள்ளே நுழைந்ததும் நீ நல்லவனா, கெட்டவனா என்று எனக்குத் தெரியவில்லை! அதனால் சும்மா குரைச்சேன்!....ஆனால் நீ
எனக்கு ரொட்டியை எறிந்த உடனே,...
நீ லஞ்சம் கொடுக்கிற மோசமான ஆள் என்று தெரிந்து விட்டது! அதனால்தான் கடித்தேன்!'' என்றது நாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.