சிறுவர்மணி

கடவுளின் சேவகன்!

DIN

ஓர் ஊரில் ஒரு அரசன் இருந்தான். அவனுடைய அரசவையில் ஒரு ராஜகுரு இருந்தார். அது நல்ல கோடைக்காலம்! அரசன் மதகுருவிடம் தனக்குக் கடவுளைக் காட்டுமாறு வேண்டினான். மதகுரு, "அது முடியாத காரியம்...'' என்றார். 
 அரசனோ, "நீங்கள் கடவுளைக் காட்டத்தான் வேண்டும்....நான் உத்தரவிடுகிறேன்!'' என்றான். மன்னனின் கட்டளையை மீற முடியுமா? 
"சரி....,என்னுடன் வெளியில் வாருங்கள்'' என்றார் ராஜகுரு. அன்று நல்ல வெய்யில்! பகல் 12 மணி! உச்சி வெய்யில் மண்டையைப் பிளந்து கொணடிருந்ததது!  சூரியனை உற்றுப் பார்க்கச் சொன்னார் ராஜகுரு.  அண்ணாந்து பார்த்த மன்னருக்கு கண் கூசியது. அவரால் பார்க்க முடியவில்லை. 
 "என்னால் பார்க்க முடியவில்லை'' என்றார் அரசர். 
உடனே மதகுரு, "உங்களால் கடவுளின் சேவகனான சூரியனையே பார்க்க முடியவில்லை.....பிறகெப்படி கடவுளைப் பார்க்க முடியும்?'' என்றார். 
 அரசன் வெட்கித் தலைகுனிந்து கடவுளின் ஆற்றலை உணரத் தொடங்கினான்!
-மாதவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT