முகப்பு
சிறுவர்மணி

அன்னை பூமி!

வீசிய விதைகளை வயிற்றினில் தாங்கிவிருட்சம், செடி, கொடி எல்லாம் தாங்கிஅரும்புடன், மொட்டு, மலர்களோடு

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:49 PM
பகிர்:

வீசிய விதைகளை வயிற்றினில் தாங்கி
விருட்சம், செடி, கொடி எல்லாம் தாங்கி
அரும்புடன், மொட்டு, மலர்களோடு
காய், கனி சுவைபட உணவாய் அளித்தாய்!

முகில்கள் முட்டும் மலைகள் தாங்கி
முட்டி மோதிய அருவிகள் தாங்கி
நதிகள், ஆழ்கடல் அனைத்தையும் தாங்கி
அழகிய முத்துப் பவழங்கள் தந்தாய்!

நச்சுப்புகைகள், நெகிழிகள் தாங்கி
நடக்கும், மிதிக்கும் பாதங்கள் தாங்கி
மல, ஜலக் கழிவுகள் மொத்தமும் தாங்கி
பொறுத்துப் பொறுத்து எங்களைக் காத்தாய்!

கார்முகில் குளிர்ந்து கீழ் விழும் நீரால்
நன்னீராடு! மேனி குளிர்வாய்!
பசுமை ஆடைகள் உடுத்திக் கொள்வாய்!
வண்ண மலர்களைச் சூட்டிக் கொள்வாய்!

தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள்
அனைத்தும் உனதே சூட்டிக் கொள்வாய்!
பொறுமையின் சிகரம்! கருணைக் கடல் நீ!
தாயே சரணம்! உன் திருவடி சரணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.