முகப்பு
சிறுவர்மணி

வருக புத்தாண்டு!

உலகம் முழுதும் கொண்டாடும் ஒருநாள் திருநாள் புத்தாண்டு!

Updated On : 30 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

உலகம் முழுதும் கொண்டாடும் 
ஒருநாள் திருநாள் புத்தாண்டு!
"நலமும் வளமும் பெறுக' என
நல்லோர் வாழ்த்தும் புத்தாண்டு!
கல்வி கற்றிடும் மாணவரின் 
கனவுகள் எல்லாம் மெய்ப்படவும்
செல்வம் படைத்தோர் செயல் யாவும் 
சிறப்புகள் சேர்த்திடும் புத்தாண்டு!
சுற்றுச் சூழல் காப்பதிலே
சுயநலமின்றிப் பொதுநலமாய்
வெற்றுரை ஆகிப் போகாமல் 
விழிப்பினைத் தந்திடும் புத்தாண்டு!
அறிவியல் ஆய்வுகள் எல்லாமும்
ஆக்க வழிகளில் பயன் தரவே 
வறுமை, ஏழ்மை, பகை, பிணிகள்
வராமல் தடுத்திடும் புத்தாண்டு!
அண்டை நாடுகள் ஒவ்வொன்றும் 
அடுத்தவர் உரிமையை மதிப்பதனால்
சண்டை என்றும் இல்லையெனும் 
சரித்திரம் நிகழ்த்திடும் புத்தாண்டு!
அன்பும், அமைதியும் நிலவிடவும் 
அறத்தின் குரலே ஒலித்திடவும் 
இன்பம் எங்கும் நிறைந்திடவும் 
இன்று வந்தது புத்தாண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.