பகைவருக்கு அருளும் நன்னெஞ்சு!
தென்னாப்பிரிக்காவில் யுத்தம் நடந்த சமயம். காந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியை மேற்கொண்டு சேவை செய்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM
தென்னாப்பிரிக்காவில் யுத்தம் நடந்த சமயம். காந்தி செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்து போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியை மேற்கொண்டு சேவை செய்தார். அப்போது ஆங்கிலத் தளபதி உட்கேட் என்பவர் போர்க்களத்தில் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தார். காந்தி அவரைப் பார்த்தார். அவரைத் தூக்கிக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தார். இந்தியர்களுக்குத் துன்பம் இழைத்த ஆங்கிலேயர்தானே என அவர் நினைக்கவில்லை. பகைவருக்கு அருளும் நன்னெஞ்சு மகாத்மாவுக்கு!