1. மூன்றெழுத்துப் பெயராகும், முற்றிலும் வெள்ளை நிறமாகும்...
2. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும்....
3. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல்...
4. கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், தண்ணீரில் தவறி விடுவான்...
5. பார்க்கத்தான் கறுப்பு, உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு...
6. பருத்த வயிற்றுக்காரன், படுத்தே கிடப்பான். இவன் யார்?
7. வயிறு இருக்கும், சாப்பிடாது... காது இருக்கும் கேட்காது...
8. துடிப்பிருக்கும் இதயம் அல்ல... இரவு பகல் விழித்திருக்கும் கண்ணும் அல்ல...
9. இளஞ்சிவப்பு ராணி, இரு பதினாறு சிப்பாய் காவல்...
விடைகள்:
1. பஞ்சு
2. எலுமிச்சம்பழம்
3. விக்கல்
4. செருப்பு
5. தேயிலைத்தூள்
6. தலையணை
7. துணிப்பை
8. கடிகாரம்
9. நாக்கு, பற்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.