முகப்பு
சிறுவர்மணி

சில்லறைத் தகராறு!

மும்பையில் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்ச்சி. ஒரு விடுதியில் ஏ.சி. அறை ஒன்றுஅவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:33 PM
பகிர்:

மும்பையில் கி.வா.ஜ. அவர்கள் நிகழ்ச்சி. ஒரு விடுதியில் ஏ.சி. அறை ஒன்றுஅவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்து அறையைக் காலி செய்யும் நேரம். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரும், விடுதி நிர்வாகிக்கும் பணம் கொடுக்கும் போது ஏ.சி. அறை கட்டணம் சம்பந்தமாக ஏதோ வாக்குவாதம் நடந்தது. 

சற்று நேரத்தில் இருவரும் சமாதானமானார்கள். விடுதி நிர்வாகி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவரிடம் பணம் பெற்றுக் கொண்டார். 

அவர் கி.வா.ஜ. விடம், ""ஐயா நீங்க தப்பா நெனக்காதீங்க, இது ஒரு சில்லறைத் தகராறு!'' என்றார். 

கி.வா.ஜ.வும் புன்னகையோடு, ""ஆமாமாம்......"ஜில்'லறைத் தகராறுதான்!'' என்று கூறியவுடன் அங்கு சிரிப்பலையும் மன நெகிழ்ச்சியும் ஏற்பட்டது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.