சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி: எல்லாவகைக் குரங்குகளையும் செல்லப் பிராணி களாக வளர்க்க முடியுமா?

பதில்: மேல்நாட்டினர் பாம்பு, ஓணான், ஆமை, காக்கை, வல்லூறு, குரங்கு என்று ஏகப்பட்ட விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்கின்றனர்.

மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் சிலந்தியைக் கூட செல்லப் பிராணியாக வளர்த்து வந்தாராம். கம்பளி ரோமக் குரங்குக் குட்டியை 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வளர்த்திருக்கிறார் ஒரு அமெரிக்கர்.

பொறுமை அதிகம் உள்ளவர்கள் மட்டுமே குரங்குகளை வளர்க்க முடியும். அதிலும் எல்லா வகைக் குரங்குகளும் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவை அல்ல.

ரீசஸ், மர்மோசெட், அணில் குரங்கு, ஆந்தைக் குரங்கு ஆகியவை வளர்ப்பதற்கு ஏற்றவை. ஒரு வார காலத்துக்குள் இவை நம்மோடு ஒட்டிக் கொள்ளும். ஆனால் சீ... போ... என்று நாயை விரட்டுவது போலக் கோபம் எல்லாம் காட்டக் கூடாது. குழந்தையை வளர்ப்பது போல கவனித்துக் கொள்ள வேண்டும்.

குரங்குகளுக்கு பொசுக் பொசுக்கென்று கோபம் வரும். அதிலும் சிம்பன்சி வகைக் குரங்கு ரொம்ப டேஞ்சர். சிறுத்தையே பெட்டர் என்று நினைக்க வைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT