முகப்பு
சிறுவர்மணி

பாராட்டுப் பாமாலை!  41: காவலர் வாழ்க!

பண்ருட்டி அருகில்தான்  சின்ன ஊராய்பாங்குடனே எல்.என்.புரம் உள்ளதாமேகண்கவரும் அந்த ஊரில் அம்பு ஜம்தான் 

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:03 AM
பகிர்:


பண்ருட்டி அருகில்தான்  சின்ன ஊராய்
பாங்குடனே எல்.என்.புரம் உள்ளதாமே
கண்கவரும் அந்த ஊரில் அம்பு ஜம்தான் 
காலமெல்லாம் கூலி வேலை செய்து வந்தே 

பண்புடனே தன்வாழ்வை நடத்துகின்றார்!
பணத்தேவை அவருக்கே வந்ததாலே
பண்ருட்டி அடகுக் கடைதன் னில்தான்
பணம் பெறவே தன் நகைகள் அடகு வைத்தார்

பணம் பெற்றுக் கொண்டவரும் வந்த போதில் 
பண்ருட்டிநான்கு முனைச் சந்திப் பில்தான்
பணப்பையைத் தவறவிட்டு வீடு சென்றார்...
பண்பு நிறைப் போக்கு வரவு காவலர்தாம் 


குணம் நிறைந்த ஹரிஹரன்தான் அதை எடுத்தார்!
கூர்த்த மதி இருந்ததாலே ஹரிஹ ரன்தான் 
பணப்பையை ஆய்வாளரி டத்தில் தந்தார்!
பணப்பையில் அடகுச்சீட் டிருந்ததாமே!

அதிலிருந்த முகவரியைக் கண்ட றிந்த 
அம்புஜத்தைத் தேடிநல்ல தகவல் சொல்லி 
அதிவிரைவாய் ஆய்வாளர் வரவ ழைத்தார்
அம்புஜத்தின் கைகளில்தான் பணப்பை தந்தார்!

அதுவரையில் துயருற்ற அம்புஜம்தான் 
அகமகிழ்ச்சி கொண்டங்கு நன்றி சொன்னார்!
இதுதானே காவலர்கள் கடமை என்றே 
இங்கெமக்குக் காட்டியவர் வாழ்க! வாழ்க!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.