சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

ரொசிட்டா

கேள்வி: கடலின் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது? 

பதில்: எல்லோரும் இப்படித்தான் சொன்னார்கள், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதால் கடலின் நிறமும் நீலமாக இருக்கிறது என்று. நானும் இப்படித்தான் நினைத்தேன்.

ஆனால், வானத்தின் நிறம் நீலமாக இருப்பதால் கடலின் நிறம் நீலமாக இல்லை. இருந்தபோதிலும் வானத்தின் நிறம் நீலமாக இருப்பதற்கான காரணம் என்னவோ அதேதான் கடலின் நிறம் நீலமாக இருப்பதற்கும். இது உளறல் போல இருந்தாலும் இதுதான் உண்மை.

சையின்டிஃபிக் அமெரிக்கன் என்ற புத்தகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தப் புத்தகம் சொல்கிறது:

சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற பிற நிறங்களை கடல் நீர் உடனடியாக உள்ளிழுத்துக் கொள்கிறதாம்.  ஆனால் நீல நிறத்தை மட்டும் கடல் நீரால் உள்ளிழுத்து மறைத்துக் கொள்ள முடியவில்லையாம். எனவே, சூரிய ஒளி கடல் நீரில் பட்டவுடன் வானவில் போன்று தோன்றும் நிறங்கள் அனைத்தையும் கடல்நீர் விழுங்கி விடுகிறது. நீல நிறத்தை மட்டும் உள்ளிழுக்க முடியாமல் பிரதிபலிக்கிறது. இதனால்தான் கடல் நீர் நீலமாக இருக்கிறது. இதே காரணம்தான் வானம் நீலமாக இருப்பதற்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT