சிறுவர்மணி

விடுகதைகள்

DIN

1. காலும் கிடையாது கையும் கிடையாது... கண்கள் உண்டு அழகிய வாலும் உண்டு... சிறகுகளும் உண்டு... இவன் யார்?
 2. இங்கு குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்கும், குளிப்பதற்குக் கிடைக்காது...
 3. இவனுக்குக் கால்கள் இருந்தாலும் யாரும் இவனைத் தூக்கித்தான் வைப்பார்கள்... நடக்க மாட்டாதவன்...
 4. வீட்டுக்குள் இருக்கும்போது மூடிக்கிடப்பவன், வெளியே போனால் திறந்து கொள்கிறான்...
 5. தொப்பி உள்ளவன் வேலை செய்ய வேண்டுமென்றால் தொப்பியைக் கழற்றி விட வேண்டும்...
 6. ஒற்றைக்கால் வெள்ளையன், ஓடையிலே தவம் கிடக்கி றான்...
 7. உடைத்தவுடன் கண்ணீர் விடுவான். இவன் யார்?
 8. பஞ்சை உண்டு படுத்துக் கிடப்பவன், தூங்கும் வேளையில் துணைக்கு வருவான்...
 விடைகள்:
 1. மீன், 2. தேங்காய் தண்ணீர்
 3. நாற்காலி , 4. குடை
 5. பேனா (மூடி), 6. கொக்கு
 7. தேங்காய், 8. தலையணை
 -ரொசிட்டா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT