சிறுவர்மணி

அன்னப்பறவைகளும் வாத்துக்கூட்டமும்!

அது ஒரு மலைப் பிரதேசம். அதில் ஒரு நீர்வீழ்ச்சியை ஓட்டி தடாகம் ஒன்று இருந்தது.

மா. பிரபாகரன்

அது ஒரு மலைப் பிரதேசம். அதில் ஒரு நீர்வீழ்ச்சியை ஓட்டி தடாகம் ஒன்று இருந்தது. தடாகம் நாற்புறமும் ஒரே சீரான கரைகளைக் கொண்டதாக இருந்தது. அதில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருந்தது. தடாகத்தில் நான்கு அன்னப் பறவைகள் வசித்துவந்தன! தடாகத்தின் கிழக்குப் பக்கம் ஒரு படித்துறை! படித்துறையை ஒட்டி கரையில் சிறு கோயில். மற்றும் ஒரு தியான மண்டபம். அந்த வனத்தில்  துறவி ஓருவர் வசித்து வந்தார். அவர் கோவிலையும் மண்டபத்தையும் பராமரித்து வந்தார்.

தடாகத்தில் ஏராளம் தாமரை அல்லி மலர்கள் பூத்துக் கிடந்தன! நண்டு நத்தை தவளை மீன்கள் சிறு புழுப்பூச்சி இனங்கள் வசித்து வந்தன. கரையைச் சுற்றிலும் ஓங்கி வளர்ந்த விருட்சங்கள் இருந்தன. எப்போதாவது மலைக்காட்டிற்குச் சுள்ளி பொறுக்க ஒன்றிரெண்டு ஆட்கள் வருவார்கள். மற்றபடி அந்தப்பகுதி அதிக மனித நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அன்னப்பறவைகள் இனிமையான சூழலில் எந்தவித அச்சமும் இன்றி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன.

 தடாகத்தின் மேற்குப்பக்கப் படித்துறையை ஒட்டி வாத்துக் கூட்டம் ஒன்று வசித்து வந்தது. வாத்துக்களை அன்னப்பறவைகளுக்குப் பிடிக்காது! அவைகள் எப்போதும் தண்ணீரில் மிதந்தபடி சோம்பலாய் தூங்கும்! கரைக்குச் சென்றால் சேறும் சகதியுமான இடத்தில் புரண்டு எழும்! எதாவது ஒரு வாத்து வானத்தை அண்ணாந்து பார்த்து கத்தினால் போதும்! என்ன ஏது என்று யோசிக்காமல் மற்ற வாத்துக்களும் "குவாக்குவாக்' என்று மொத்தமாய் குரல் கொடுக்க ஆரம்பித்துவிடும்! இதனால் அன்னப்பறவைகள் வாத்துக்களை வெறுத்தன! அவைகளிடம் நட்பு பாராட்டாமல் இருந்தன! தங்கள் பக்கம் அவைகளை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டன. வாத்துக்களுக்கு அன்னப்பறவைகள் தங்களிடம் நேசமாக இல்லை என்ற வருத்தம் இருந்தது.

துறவி தினம்தோறும் அருவியில் நீராடுவார்!  தடாகத்தில் தாமரைப் புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு போவார். கோயிலில் பூஜைகள் செய்வார்! மண்டபத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவார்! சமயங்களில் படித்துறையில் அமர்ந்து தடாக நீரைக் கைகளால் அளைந்தபடி அன்னங்களிடம் பேசுவார். அன்றைக்கும் அவர் அன்னங்களிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது அன்னப்பறவைகள் துறவியிடம், “

""இந்த வாத்துக்களை வேற எங்கயாவது போய் வாழச் சொல்லுங்க! இதுகளை எங்களுக்குப் பிடிக்கல!''” – என்றன. 

""எதுனால இப்படிச் சொல்றீங்க?'' என்று”துறவி கேட்டார். 

""இதுக ரொம்ப சோம்பலா இருக்குதுங்க! தடாகத்தை அழுக்குப் பண்ணுதுங்க! கத்தி கூப்பாடு போடுதுங்க!"" என்றன” – அன்னங்கள் .

துறவி அன்னங்களின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 

""இந்த தடாகத்துக்கு அருவியிலே இருந்துதான் தண்ணீர் வருது! அதுனால தினமும் தண்ணீர் புதுசா மாறிக்கிட்டுதான் இருக்கு! வாத்துக்கூட்டத்தால தடாகம் அழுக்காகுதுங்குறத என்னால ஏத்துக்கிட முடியாது!......வானத்தைப் பாத்து அண்ணாந்தபடி கூட்டமா கத்துறது வாத்துக்களோட இயல்பு! அதை நீங்க வெறுக்கக் கூடாது! ரசிக்கக் கத்துக்கனும்!....வாத்துக்கள் இங்கதான் இருக்கும்! அதுங்க வேற எங்கயும் போகாது! இந்தத் தடாகம் அதுகளுக்கும் சொந்தமானதுதான்!'' என்று உறுதிபட சொன்னார் துறவி! வேறு வழியின்றி அன்னங்கள் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டன. 

ஒருநாள் அன்னப்பறவைகள் படித்துறையில் விளையாடிக் கொண்டிருந்தன. வேடன் ஒருவன் அருகே புதரில் மறைந்திருந்தான். அவன் அன்னங்களைப் பிடிக்க தண்ணீருக்குள் வலை விரித்திருந்தான். அன்னங்களுக்கு இது தெரியாது. விளையாடி முடித்துவிட்டு அவைகள் தடாகத்தில் இறங்கிய போது வலையில் சிக்கிக் கொண்டன! வேடன் அன்னப்பறவைகளோடு வலையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினான்!.... அன்னங்கள் பிடிபட்டதைப் பார்த்த வாத்துக்கள் பதைபதைத்தன!.... அவைகள் அன்னப்பறவைகளைக் காப்பாற்ற முற்பட்டன!.... அவைகள் சப்தம் எழுப்பியபடி வேடனை நோக்கி வந்தன!.... அவற்றில் சில வேடன் மீது பாய்ந்து அவனைத் தாக்க முற்பட்டன!..... வேடன் முரட்டுத்தனமாக அவைகளைக் கீழே தள்ளி விட்டான்!.... வாத்துக்களின் சப்தம் பலமடங்கு அதிகரித்தது! 

குடிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துறவிக்கு வாத்துக்களின் இரைச்சல் கேட்டது. வழக்கமான ஒன்றாக இல்லாமல் அதில் ஓர் அபாயம் ஒளிந்திருப்பதை அவர் உணர்ந்தார். ஏதோ தப்பாக நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். அவர் குடிலை விட்டு வெளியே வந்தார். 

வேடன் அவரின் கண்ணில் பட்டான். துறவி அவனிடம், ""அன்னங்களை விடுவி!''” – என்றார்.

""ஐயா! நீங்க நினைக்குற மாதிரி நான் இதுகளைக் கொல்ல மாட்டேன்! அன்னங்களைத் தங்களோட வீட்டுல வளர்க்குறத செல்வந்தர்கள் கெளரவமா நினைப்பாங்க! நான் இதுகளை அவங்ககிட்ட நல்ல விலைக்கு வித்துருவேன்!''” – என்றான் வேடன். 

துறவி அவன் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. 

""எப்பேர்பட்ட செல்வந்தர்களா இருந்தாலும் அவங்களால அன்னங்களுக்கு இது மாதிரியான இயற்கையான சூழலைக் கொடுக்க முடியாது! அன்னங்களை விடுவி!''”என்று மீண்டும் ஒருமுறை துறவி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். 
இந்த வேட்டைத் தொழிலை விட்டுவிடச் சொல்லி அவனுக்கு அவர் பலமுறை உபதேசித்திருக்கிறார். துறவியின் கோபம் அவனை சுட்டெரித்து விடும் என்பதை வேடன் நன்கு அறிவான். வேறு வழியின்றி அவன் அன்னங்களை விடுவித்தான்.

முதன்முதலாக அன்னப்பறவைகள் தங்களை அழகற்ற பறவைகளாக உணர்ந்தன. எந்த வாத்துக்களை அவைகள் வெறுத்தனவோ அந்த வாத்துக்கள் இப்போது அழகானவையாகத் தெரிந்தன. அவைகள் மட்டும் ஆபத்தில் உதவாமல் போயிருந்தால் இந்நேரம் வேடன் அவைகளைக் கொண்டு போயிருப்பான். நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. அன்னப்பறவைகள் வாத்துக்களிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொண்டன. உங்களுக்குத் தெரியுமா? இப்போது வாத்துக்களும் அன்னப்பறவைகளும் அதே தடாகத்தில் மகிழ்ச்சியாக ஒன்றுகூடி ஆடியும் பாடியும் இருந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT