சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

தினமணி

கேள்வி: சூரிய கடிகாரம் பற்றித் தெரிந்து கொண்டோம். பூமியிலிருந்து சூரியன் எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது தெரியுமா?

பதில்: சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் குத்துமதிப்பாக 93 மில்லியன் மைல்கள்.
ஒளிதான் மிக வேகமாகப் பயணிக்கும் என்று படித்திருப்பீர்கள்.  இந்த ஒளி கூட சூரியனிலிருந்து பூமியை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் 8 நிமிடங்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
சரி, நாம் சூரியனை அடைவதற்கு எவ்வளவு நேரம் அல்லது நாட்கள் ஆகும்?
மணிக்கு 550 மைல்கள் வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் நாம் பயணித்தால் சூரியனைச் சென்றடைய 19 ஆண்டுகள் ஆகும்.
மணிக்கு 60 மைல்கள் வேகத்தில் செல்லும் காரில் பயணத்தில் சூரியனை அடைய 177 ஆண்டுகள் ஆகும். அம்மாடியோவ்!
அரிஸ்டார்கஸ் என்ற கிரேக்க விஞ்ஞானிதான் முதன் முதலில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் கணக்கிட்டார் என்று கூறப்படுகிறது. இவர் கணக்கிட்டுச் சொன்னது கி.மு.250-ல் என்கிறார்கள். 
மிகவும் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொன்னவர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் கணக்கிட்டது 1653-ஆம் ஆண்டில். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT