* "நூறில் ஒண்ணு போனா எத்தனை?''
"ரெண்டு சைபர்!''
டி.மோகன்தாஸ், நாகர்கோவில்.
✶ "காலை உணவாக எதையெல்லாம்
சாப்பிடக் கூடாது?''
"லஞ்சையும், டின்னரையும்தான்!''
உ.அலிமா பீவி, கடையநல்லூர்.
✶ "இந்த அல்வா எதுலே செஞ்சது!''
"..."வீட்'....லே''
"எங்கே செஞ்சது?''
"வீட்லே!''
க.ஜோதிராம், 8 - ஆம் வகுப்பு, 21/12, மீனாட்சி நகர், 8 - ஆவது தெரு,
வில்லாபுரம், மதுரை - 625012
✶ "டம்ளரைக் காணோம்னு
தேடுனீங்களே,..... எங்கே பாட்டி இருந்தது?''
"கிணத்தடியிலே கிடந்தது''
"கிணத்து அடியிலே இருந்ததை எப்படிப் பாட்டி இறங்கி எடுத்தீங்க?''
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி,
திருத்துறைப்பூண்டி - 614715.
✶"டி.வி.யிலே ஏன் படம் போடறாங்க
தெரியுமா?''
"ஏன்?....நீயே சொல்லு!''
"ரேடியோவிலே போட முடியாதுல்லே
அதனாலேதான்!''
க.நந்திகாஸ்ரீ, சென்னை.
✶ "ராமுகிட்டே குண்டூசியைக் குடுத்தா
வாங்க மாட்டான்!''
"ஏன்?''
"அவன் எப்பவுமே பின் வாங்க
மாட்டானாம்!''
அமுதா அசோக்ராஜா, அசூர் - 620015.
வாரம் 2 டி-சர்ட் பரிசு நட்சத்திரக் குறியிட்ட 2 கடிகளும் பட்டுக்கோட்டை ரூபி ரெடிமேட்ஸ் வழங்கும்
தலா ஒரு டி-சர்ட்டைப் பெறுகின்றன. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.