இன்னா செய்யாமை
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணா செய்யாமை தலை.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:32 PM
அறத்துப்பால் - அதிகாரம் 32 - பாடல் 7
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.
- திருக்குறள்
எத்தனை கோபம் இருந்தாலும்
எத்தனை பகைகள் இருந்தாலும்
எள்ளளவேனும் துன்பத்தை
எவர்க்கும் செய்ய எண்ணாதே
Advertisement
எத்தனைதான் இருந்தாலும்
எங்கு எங்கு சென்றாலும்
எவர்க்கும் துன்பம் செய்யாமல்
இருப்பதுவே மேலாகும்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்