கொல்லாமை
தன் உயிர் நீப்பினும் செய்யற்க, தான் பிறிது இன்னுயிர் நீக்கும் வினை.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM
அறத்துப்பால் - அதிகாரம் 33 - பாடல் 7
தன் உயிர் நீப்பினும் செய்யற்க, தான் பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
- திருக்குறள்
தனது உயிர் போனாலும்
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்
பிறிது உயிரை நீக்கிடும்
பிழையைச் செய்யக்கூடாது
Advertisement
தனது உயிர் போகாமல்
தடுப்பதற்காய் இன்னுயிர்
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்