விடுகதைகள்
அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து. இது என்ன?
1. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து. இது என்ன?
2. ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர்...
3. நீந்தத் தெரியும் மீனில்லை, நடக்கத் தெரியும் மனிதனும் இல்லை, இறக்கை இருந்தும் பறக்காத பறவை இது...
4. விடிய விடிய பூந்தோட்டம், விடிந்ததும் பார்த்தால்
வெறும்தோட்டம்...
5. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்...
6. வெட்டிக் கூறு படுத்தி வைக்கிறார்களே தவிர, எவரும் தின்பதில்லை...
7. எண்ண, எண்ண எண்ணும்போது காசுகளோ...
8. குளம்படிச் சத்தக்காரன், போருக்குக் கெட்டிக்காரன்...
9. நீரில் உள்ள கல், என்ன கல்?
விடைகள்
1. கோலம்,
2. கானல் நீர்,
3. வாத்து,
4. நட்சத்திரங்கள்,
5. தவளை,
6. சீட்டுக்கட்டு,
7. தந்தி,
8. குதிரை,
9. கலங்கல்.