முகப்பு
சிறுவர்மணி

பாரத மணிக்கொடி பார்!

பட்டொளி வீசி பறக்கும்  எங்கள் பாரத மணிக்கொடி பார்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

பட்டொளி வீசி பறக்கும்  எங்கள் 
பாரத மணிக்கொடி பார்!
எட்டு திசையிலும் எங்கள் நாட்டு 
ஏற்றும் தெரியுது பார்!

இமயம் துவங்கி குமரி வரையிலே 
இருக்கின்ற மொழிகள் ஏராளம்!
இருப்பினும் நாங்கள் இந்தியன் என்ற 
மந்திரச் சொல்லால் ஒன்றாவோம்!

எங்கள் கொடியின் வண்ணங்கள் மூன்று 
எண்ணம் என்றும் ஒன்றேதான்!
சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்கள் 
"தியாகம்' .... "தூய்மை' .... "வளமை' யன்றோ?

நடுவில் தெரியும் அசோகச் சக்கரம் 
தர்ம வழியினை பறை சாற்றும்!
காந்தி,... கோகலே,... திலகர்,...பகத்சிங்,
வ.உ.சி,... வாஞ்சி,...பாரதி,... சிவா

இன்னும் எண்ணற்ற தியாகிகள் சேர்ந்து
சிந்திய ரத்தமே இந்திய சுதந்திரம்!
உயரே பறக்கும் கொடியை வணங்கி
உயிரினும் மேலாய் நாட்டைக் காப்போம்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.