அழகுப் பிள்ளையார்!
அன்னை, தந்தை இருவர்தான் உலகின் முதல் கடவுளெனஅழகாகக் காட்டிவிட்டார்
அன்னை, தந்தை இருவர்தான்
உலகின் முதல் கடவுளென
அழகாகக் காட்டிவிட்டார்
அழகுப் பிள்ளையார்!
யானை உடல் இருந்தாலும்
எலிகூட அவரைத் தூக்கும்!
இலகுவாக ஆக்கிக் கொள்வார்
அழகுப் பிள்ளையார்!
மஹா பாரதத்தை வியாசர் சொல்ல,
படக் கென்று தந்தத்தை
ஒடித் தெழுதித் தந்துவிட்டார்!
அழகுப் பிள்ளையார்!
சலிக்காத அழகோடு
ஓங்கார முகம் கொண்டு
உலகெங்கும் வலம் வருவார்
அழகுப் பிள்ளையார்!
தலையில் குட்டு போட்டுக்கொண்டு
தோப்புக் கரணம் போட்டுவிட்டால்
தப்பெல்லாம் மன்னிப்பார்
அழகுப் பிள்ளையார்!
அவல், பொரி, கடலை, பழம்
அப்பம், கொழுக்கட்டை தந்தால்
ஆனந்தத் தோடு உண்பார்
அழகுப் பிள்ளையார்!
எளிமையான எருக்கம் பூ
அருகம் புல்லே போதும்!
ஆசையாக ஏற்றுக் கொள்வார்
அழகுப் பிள்ளையார்!