1. இந்த வால் குதிரை ஓட ஓடக் குறையும்...
2. பூக்கும், காய்க்கும், வெடிக்கும்... ஆனால் பழுக்க மட்டும் செய்யாது...
3. எல்லா வித்தையும் தெரிந்தவன், தெரியாதவன் போலப் பாவனை செய்கிறான்...
4. ஆடி ஆடி நடப்பான், அரங்கதிர வைப்பான்...
5. அடிப்பக்கம் மத்தளம், இலையோ நீண்டது, குலையோ பெரிது, காயோ துவர்ப்பு, பழமோ இனிப்பு...
6. ஒருவனுக்கு உணவு அளித்தால் ஊரையே கூட்டி விடுவான்...
7. கோட்டைக்குள் உள்ள வெள்ளைக்காரர்கள் வயதானால் வெளியேறி விடுவார்கள்...
8. தண்ணீரிலே கண்ணீருடன் காத்திருக்கும், கதிரவன் வரவு கண்டால் முகம் மலர்ந்து விடும்...
9. புதரின் நடுவே பொன் போலப் பூத்திருக்கும், பொய் சொன்ன பூ என்று புராணக்கதை கூறும்...
விடைகள்
1. ஊசி நூல்,
2. இலவம் பஞ்சு,
3. சர்க்கஸ் கோமாளி,
4. யானை,
5. வாழை மரம்,
6. காகம்,
7. பற்கள்,
8. தாமரைப் பூ,
9. தாழம்பூ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.