சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் பிள்ளையார் சம்பந்தமான ஒரு விழாவின் பெயர் கிடைக்கும்.
எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். முயற்சியுங்கள்...
1. மலர்களை ஒன்றாகக் கோர்த்தால்...
2. நமக்குத் தேவை நம்பிக்கை, யானையிடம் இருப்பது...
3. இந்த மாதத்துக்கும் காந்திக்கும் சம்பந்தம் உண்டு...
4. உங்கள் பள்ளிப் பைக்குள் இது நிச்சயம் இருக்கும்...
5. தாளிலே கலை வண்ணம்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. பூச்சரம்,
2. தும்பிக்கை,
3. அக்டோபர்,
4. புத்தகம்,
5. சித்திரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல் : சதுர்த்தி