முகப்பு
சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: அஸ்திவாரக்கல்!

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையோடு 1921 - ஆண்டு லோக் சேவா மண்டல் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் லாலா லஜபதி ராய்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையோடு 1921 - ஆண்டு லோக் சேவா மண்டல் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் லாலா லஜபதி ராய்.

1966-ஆம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி லோக் சேவா மண்டல் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் அவருக்கு மக்களிடையே, வரவேற்பும், புகழ்ச்சியும் கிடைத்தது. பத்திரிகைகளும் அவரை மிகவும் புகழ்ந்தன.

ஆனால் இதை சாஸ்திரி விரும்பவில்லை. புகழ்ச்சியும், தேவையற்ற ஆடம்பர வரவேற்பும் அவரைக் கூச்சமடைய வைத்தன.

அவரது நண்பர்கள், ""தாங்கள் ஏன் இப்படிக் கூச்சப்படுகிறீர்கள்?.விரும்பி அளிக்கப்படும் மரியாதையை ஏன் மறுத்துவிடுகிறீர்கள்'' என்று கேட்டனர்.

அதற்கு லால் பகதூர் சாஸ்திரி, ""லாலா லஜபதி ராய் என்னிடம், "லோக் சேவா மண்டல் அமைப்பின் கொள்கையை விளக்கியபோது, தாஜ் மஹாலில் இரண்டு வகையான கற்கள் இருக்கின்றன. ஒன்று, விலை உயர்ந்த சலவைக் கற்கள். அவற்றை உலகம் முழுவதும் பார்க்கிறது! ரசிக்கிறது! புகழ்கிறது! இரண்டாவது வகைக் கற்கள் தாஜ்மஹாலின் அஸ்திவாரத்தில் உள்ளன. அவை மண்ணில் புதையுண்டு இருளிலேயே இருக்கின்றன. ஆனால் தாஜாமஹாலை நிலை பெறச் செய்வது அவைகளே!' என்று கூறினார்!.... அந்தச் சொற்கள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன..... நானும் அஸ்திவாரக் கல்லாகவே இருக்க விரும்புகிறேன்...'' என்றார்.

அவரது எளிமையைக் கண்டு நண்பர்கள் வியந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.