முகப்பு
சிறுவர்மணி

காஞ்சி மஹா பெரியவரின் பொன்மொழிகள்

செல்வாக்கு படைத்தவர்கள் அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைமையை மேம்படுத்த தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

செல்வாக்கு படைத்தவர்கள் அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைமையை மேம்படுத்த தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு சிறு புல்லைக்கூட மனிதன் படைக்க இயலாது. நாம் உண்ணும் உணவையும், உடுக்கும் உடையையும் முதலில் ஆண்டவனுக்கு நிவேதனம் செய்யாவிடில் மிகவும் கீழ்த்தரமான செய்நன்றி மறத்தல் என்னும் குற்றத்திற்கு ஆளாவோம்.

அன்பற்ற வாழ்க்கை பாழானது. எல்லோரிடமும், எல்லா விலங்குகளிடமும், பறவைகளிடமும் அன்பு செலுத்துவதை ஒவ்வொருவரும் பேணி வளர்க்க வேண்டும்.

பாராட்டத்தக்க ஒரு பணியைச் செய்தவன் அதற்காக மற்றவர்கள் அவனைப் புகழ்வதை விரும்பிக் கேட்டாலோ, அல்லது தானே அதைப்பற்றி புகழ்ந்து கொண்டாலோ, அப்பணியால் அவனுக்குக் கிடைக்கும் சிறப்பை இழந்து விடுவான்.

நடந்து விட்டதைப் பற்றி துயரப்பட்டுக் கொண்டிருப்பதில் ஒரு நன்மையும் இல்லை. நன்மைக்கும், தீமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ள நாம் கற்றுக்கொண்டு விட்டால், நாம் மீண்டும் தீய வழியில் செல்லாமல் அது நம்மைக் காக்கும்.

நம் வாழ்நாட்களை நல்ல குறிக்கோளுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

பக்தி வர வேண்டுமானால் சாந்தம் வரவேண்டும்.

சாப்பிடுபவனைவிட, சாப்பாடு அளித்தவனுக்குத்தான் அதிக ஆனந்தம் இருக்கும்.

தேவைகள் அதிகரித்துக்கொண்டே போனால், அதற்கேற்பப் பிரச்னை
களையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.