முகப்பு
சிறுவர்மணி

இயேசு பிறந்தாரே!

கன்னி மாதா கனிவுடன் உலகில் கடவுளின் குழந்தையைப் பெற்றெடுத்தாள்!அன்னை மேரியின் மடிதனிலே 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

கன்னி மாதா கனிவுடன் உலகில் 
கடவுளின் குழந்தையைப் பெற்றெடுத்தாள்!
அன்னை மேரியின் மடிதனிலே 
அழகிய குழந்தை தவழ்ந்ததுவே!

அடடா! வானில் அருள் ஜோதி!
தேவ குழந்தைகள் ஒளி வீதி!
கடவுள் இயேசு பிறந்தாரே!
கர்த்தரின் ஒளியாய் இருந்தாரே!

மனித இனத்துப் புனிதமடா!
அவரே நமக்கு இன்பமடா!
வேத முழக்கம் கேட்குதடா!
வானில் விண்மீன் ஒளிருதடா!

மூவகை அறிஞர் காண்கின்றார்!
முழுமதி இயேசுவைத் தொழுகின்றார்!
தேவ லோகமே வந்தாச்சு!
தெய்வக் குழந்தை பிறந்தாச்சு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.