மண்பாண்டங்கள்!
ஆதி காலச் சமையலின் அற்புதமான பாத்திரம்!பாது காப்பை உணவிலே
சிறுவர்மணிமண்பாண்டங்கள்!
ஆதி காலச் சமையலின் அற்புதமான பாத்திரம்!பாது காப்பை உணவிலே
ஆதி காலச் சமையலின்
அற்புதமான பாத்திரம்!
பாது காப்பை உணவிலே
பக்குவமாகச் சேர்ப்பது!
ஏரி, குளங்கள் குட்டையில்
எடுத்த களி மண்ணினால்
சேறு பிசைந்து செம்மையாய்
செய்த மண்ணின் கலயங்கள்!
சின்ன, பெரிய பாத்திரம்
சிவப்பு நிறத்தில் உள்ளன!
மண்ணில் செய்து நெருப்பிலே
வேக வைத்த பாத்திரம்!
மண்ணின் கலயம் தன்னிலே
மணக்க மணக்க சமைக்கலாம்!
உண்ணும் நல்ல உணவினால்
உடலின் நலத்தைக் காக்கலாம்!
கு.சாந்தி