முகப்பு
சிறுவர்மணி

தேர்வு வந்தது!

ஆண்டிற்கு ஆண்டு தேர்வு வரும்அச்சமும் அதனுடன் சேர்ந்து வரும்!வேண்டாம் உனக்கு வீண் கவலை

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:47 PM
பகிர்:

ஆண்டிற்கு ஆண்டு தேர்வு வரும்
அச்சமும் அதனுடன் சேர்ந்து வரும்!
வேண்டாம் உனக்கு வீண் கவலை
விரும்பி உழைத்தால் கல்லும் சிலை!

வகுப்பைச் சிறப்பாய்க் கவனித்தால்
வருந்திட  வேண்டாம் தேர்வினிலே!
தொகுத்துக் குறிப்பு எடுத்திட்டால்
தொடரும் குழப்பங்கள் உனக்கில்லை!

பலமுறை நீயும் படித்திடுவாய்!
படித்ததை எழுதிப் பார்த்திடுவாய்!
இரவில் விழித்துப் படிக்காதே!
எழுந்து படிப்பாய் அதிகாலை!
மறதி உனக்குப் பகையாகும்
முயற்சியும் பயிற்சியும் கை கொடுக்கும்!
வேண்டாம் உனக்கு மனக்கலக்கம்!
வெற்றி நிச்சயம் உன்பக்கம்!

எழுதுகோல் என்னும் ஆயுதத்தை 
ஏந்தி நிற்கும் வீரன் நீ!
ஆற்றல் உனக்கு மிக உண்டு 
அறிவால் எதையும் வென்றிடுவாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.