முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள். விவேகானந்தர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:


இந்திய நாடே என் கோயில். நாம் தொழ வேண்டிய செல்வம் நமது தேச மக்கள்.
 விவேகானந்தர்

தவறை உணர்வதே அதைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்! 
 ஸ்ரீஅன்னை

போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை.  
 சாரதாதேவி

நல்ல சொற்களைப் பேசத் தெரியாதவன் ஊமை. நல்லவற்றைக் கேட்காதவன் செவிடன். 
 ஆதிசங்கரர்

தன்னலமற்ற பணி புரிவதே கீதையின் ரகசியம்! 
 காந்தியடிகள்

உயர்ந்த தவம் பொறுமை. உயர்ந்த ஆயுதம் மன்னிப்பு. உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி. 
 குருநானக்

யாரிடத்தில் இரக்கம் அதிகப்பட்டிருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். 
 வள்ளலார்

அமைதியைவிட மேலான ஆனந்தம் வேறெதுவும் இல்லை. 
 புத்தர்

அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் ஆண்டவனை நேசித்தவனாகிறான். 
 புட்டபர்த்தி சாய்பாபா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.