முகப்பு
சிறுவர்மணி

விடுகதைகள்

சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப் பான். இவன் யார்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

1. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப் பான். இவன் யார்?
2. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான். இவன் யார்?
3. ஆட்டி விட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான்...
4.  மண்ணெடுத்துக் கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும்...
5. சிதறிக் கிடக்குது புள்ளிகள், சித்திரம் வரைய ஆளில் லை...
6. விருந்துக்கு அழைத்து, விதியை முடிப்பவன்...
7. குதி குதித்தான், பல் இளித்தான்...
8. மேனி முழுவதும் கண் உடையவன், தன்னிடம் வந்தவரைச் சிக்க வைப்பான்...
9. முதல் எழுத்து தமிழின் இரண்டாம் எழுத்து, கடைசி மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை. மொத்தத்தில் 
இது வரும் முன்பு எச்சரிக்கை தேவை.


விடைகள்


1. ரப்பர்  
2.  தொலைபேசி  
3. ஊஞ்சல் 
4.  கரையான்
5.  நட்சத்திரங்கள்
6.  எலிப்பொறி  
7.  சோளப் பொரி
8.  மீன் வலை  
9.  ஆபத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.